Thursday, July 4, 2013

கூட்டு நிறுவனங்களின் வருமான வரி நமனா பதிவு செய்யும் கடைசி நாள்.


இன்று என்னுடைய முதல் பதிவை கடவுளின் அருளுடன் ஆரம்பிக்கிறேன். உங்களுடைய வாழ்த்துக்களையும்  வேண்டுகிறேன்.

வருகிற ஜூலை மாதம் 31ம் தேதிக்குள்  தனிப்பட்ட நபர்கள், இந்து அவி பக்த  குடும்பங்கள் , மற்றும் ஒரு  கோடிக்கு குறைவுள்ள வியாபாரம் உள்ள  சிறு கூட்டு நிறுவனங்கள், தங்களுடைய வருமான வரி நமுனக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

அவர்கள் அவ்வாறு தாக்கல் செய்யாவிடில் அதற்காக பெனால்டி மற்றும் அபராத வட்டியும் கட்ட வேண்டி இருக்கும்.

வருமான வரி நமுனா தாக்கல் செய்யும் முன்னர் ஒவொருவரும் வருமானவரி இலாகாவின் TRACES என்ற WEBSITE சென்று அவர்கள் கணக்கில் வருமான வரி பிடித்தம் எவ்வளவு வைக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு வரி பிடித்தம் செய்து யாராவது tds return பதிவு செய்யாமல் இருந்தாலோ அல்லது வரி பிடிக்கப்பட்டு அது தமது  கணக்கில் வராமல் இருந்தாலோ அதை சரி செய்து விட்டு அதற்கு பிறகுதான் வருமான வரி நமனா தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே வருமான வரி இலாகாவின் TRACES WEBSITE( TDS WEBSITE) சரியாக வேலை செய்வது இல்லை. இதற்க்கு முன் களத்தில் இந்த வேலையை NSDL என்ற மத்திய அரசு நிறுவனம் செய்து வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு சொந்தமாகவே ஒரு website உருவாக்கி அதற்கு TRACES என்று பெயரிட்டு ஆரம்பித்தது.
 இதை தினசரி நடத்தும் வேலையை இன்போசிஸ் நிறுவனத்துக்கு கொடுத்தது.

ஆனால் இந்த வேலையை இன்போசிஸ் சரியாக செய்யாதகாரணத்தால் வருமான வரி நமனா தாக்கல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது மட்டும் இல்லாமல் சிறு கூட்டு நிறுவனம்கள் தாக்கல் செய்ய வேண்டிய பாரம்  எண் V க்கு ஆன online filing இன்னும் ஆரம்பிக்கவில்லை.

இந்த மாதமே கடைசி ஆக இருக்கும்போது இதை இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பது சரி அல்ல.

கடைசி ஆக ஆக நமுனாக்கள் அவசரகதில் தயாரிக்கப்பட்டு தவறுகள் ஏற்பட வைப்புகள அதிகம் ஆகும்.

இந்த பிரச்சினைகளை வருமானவரி துறை நேர் கொண்டு விரைவில் தீர்க்க வேண்டும்.


2 comments:

  1. பயனுள்ள தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி.தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி.முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete