Monday, July 8, 2013

வருமான வரி return எப்படி scrutinyஇக்கு தேர்வு செய்ய படிக்கிறது.

வருமான வரி assessment ஆனது  பல விதமானது ஆகும். முக்கியானவை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

1. summary assessment
2. Scrutiny assessment.
3. Search assessment.
4. Reassessment.



இவற்றில் பலருக்கும் அவவப்போது வருவது scrutiny assessment ஆகும்.
scrutiny assessmen என்பதன் அர்த்தம் நன்றாக விசாரணை செய்து நமது வருமானத்தை வருமான வரி அதிகாரி கணக்கீடு செய்து வரி விதித்து வசூல் செய்வது என்று அர்த்தம் ஆகும்.

இவ்வாறு scrutiny assessmen செய்தால் வழக்கமாக எல்லோருக்கும் நாம் காண்பித்து கட்டிய வரியை விட அதிகம் கட்ட வேண்டி வரும். இது மட்டும் அல்லாமல் வாய்தா போடப்படும் போதும் பல தடவை,நாம் வருமான வரி அலுவலகத்துக்கு நமது கணக்கு புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். நாம் செய்த செலவுகள் எல்லாவற்றுக்கும் கொள்முதல் பில்கள், அல்லது voucher எடுத்து கொண்டு செல்ல வேண்டும். அதிகாரி கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் செல்ல வேண்டும்.

ஆகவே இந்த scrutiny assessment என்பது ஒவ்வொருக்கும்  மிகவும் கஷ்டமான காலம் என்பது உண்மை.

இன்றைய தலைப்பு இந்த scrutiny assessmentக்கு case எவ்வாறு வருமான வரி இலகாவினால்  தேர்த்து எடுக்கபடிகிறது என்பதை பார்போம்.

ஒரு வருமான வரி அதிகாரி வழக்கமாக வருடம் ஒன்றுக்கு சுமாராக 125  case
விசாரணை செய்து வரி விதிப்பார்.

இதில் அவர் 25 கேஸ் அவரே தேர்த்து எடுக்கும் உரிமை உள்ளது.  மீதியை வருமான வரி இலாகாவின் கம்ப்யூட்டர் சிஸ்டம் தேர்த்து எடுக்கிறது. இதை நாம் CASS முறை COMPUTER ASSISTTEDSCRUTINY SELECTION என்று கூறுகிறோம்.

வருமான வரி அதிகாரி தேர்த்து எடுக்கும்போது அவர்  அவரிடம் உள்ள நல்ல கேஸ் ஆகவும் , எதில் அதிகம் வரி ஏமாற்றம்  அதிகமாக அவருக்கு தோணுகிறதோ அதை தேர்த்து எடுத்து மேல் அதிகாரி (JOINT/ ADDITIONAL COMMISSIOER OF INCOMETAX) அவர்களிடம் முன் அனுமதி பெற்று நோட்டீஸ் அனுப்புவார். இதில் அவர் தேர்த்து எடுபதற்கு கிழ்க்கண்ட காரணங்கள் எதுவாக இருக்கலாம்.
1. அந்த வருடத்தில் பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கலாம்.  அதற்கான செலவுகள் மிக குறைவாக கண்பிக்க பட்டு இருந்தால் அந்த கணக்கு நன்றாக விசாரிக்கப்பட்டு கட்டிடத்தின் உண்மையான செலவு CPWD முலமாக மதிப்பீடு செய்யப்பட்டு வித்தியாசத்துக்கு வரி விதிக்கப்படும்.

2. அந்த வருடத்தில் ரூபாய் பத்து லட்சத்து மேல் எதாவது தொழிலில் முதலீடு செய்து இருந்தால் அந்த கேஸ் scrutiny க்கு எடுத்து கொள்ளப்பட வாய்ப்பு உண்டு.

3. unsecured loans ரூபாய் 25 லட்சத்து மேல் வாங்கி இருந்தால் scrutiny வர வாய்ப்பு உண்டு. வங்கிகளிடம் வாங்கிய கடன்கள் எப்போதும் securedஆகவே இருக்கும். மற்ற உறவினர் வசம் வாங்கும் கடன்கள் தீவிரமாக விசாரிக்கப்படும். ஆகவேதான் இவ்வாறு பெரும் unsecured கடன் இருந்தால் scrutiny செய்து கடன் கொடுத்தவரை விசாரித்து பிறகு உத்திரவு போடுவார்கள். வெகு பேர் தங்களுடைய உறவினர் அல்லது நண்பர்களை உபயோகபடுத்தி அவர்களுடைய கருப்பு பணத்தை கணக்கில் வைக்க முயற்சிப்பதை இந்த SCRUTINY கண்டு பிடிக்கும்.

4. sundry creditors அதாவது பொருள் கொள்முதல் செய்து அதற்கு கொடுக்க வேண்டிய தொகையில் பாக்கி வைத்து இருப்பது ஆகும்.. இந்த வகையில் மொத்தமாக கொடுக்கப்பட வேண்டிய தொகை அந்த வருடத்தின் மொத்த விற்பனை தொகையில் 30% க்கு மேலாக இருந்தால் scrutiny வர கண்டிப்பாக வாய்ப்பு உண்டு.  உதாரணமாக ஒருவருடைய மொத்த விற்பனை ஒரு கோடி என்றால் அவருடைய வருட கடைசியில் கொடுபட பாக்கி(SUNDRY CREDITORS) ரூபாய் 30 லச்சம் மேல் போனால் SCRUTINY வர வாய்ப்பு உண்டு.

 நீங்கள் ஏன் இவ்வாறு scrutiny செய்ய வேண்டும் என்று நினைப்பது தெரிகிறது. காரணம் என்ன என்றால் சிலர் sundry creditorsகளுக்கு தங்களுடைய கருப்பு பணத்தை கொடுத்து விட்டு இங்கே கணக்கில் பணம் இருப்பு வைத்து இருப்பார்கள். அப்போது அவர்கள் கணக்கில் பணம் அதிகமாக இருப்பு இருக்கும். அந்த பணத்தை கணக்கில் சொத்து வாங்க உபயோக படுத்துவார்கள். இதை கண்டு பிடிக்கத்தான் இந்த மாதிரி sundry creditors மிக அதிகமாக இருந்தால் scrutinyக்கு எடுக்கிறார்கள்.

5. வழக்கமாக காண்பிக்கும் லாபத்தைவிட வெகுவாக குறைத்து வருமானம் காண்பித்தாலும் scrutiny வர வாய்ப்பு உண்டு.

6. முந்தின வருடம் scrutinyக்கு எடுக்கப்பட்டு ரூபாய் 10 லட்சத்து மேல் வருமானம் அதிகம் செய்து (addition) இருந்தாலும் இந்த கேஸ் scrutinyக்கு எடுக்கப்படும்.


இதுமட்டும் இல்லாமல் கிழ்க்கண்ட கேஸ்கள் , AIR information படி scrutinyக்கு எடுக்கபடுகிறது. AIR என்றால் என்ன ?

AIR என்றால் ANNUAL INFORMATION RETURN ஆகும். கிழ்க்கண்ட அதிகாரிகள் வருட வருடம் ஒரு return பதிவு செய்ய வேண்டும். அதை வைத்து வருமான வரி இலாகா scrutinyயை ஆரம்பிக்கும்.
அ. வங்கிகள்,
ஆ, CREDIT CARD ISSUING COMPANIES,
இ. ஷேர் வழங்கும் கம்பனிகள்.
ஈ, MUTUALFUNDS,
உ. சப் REGISTRAR,

1. வங்கியில் ஒரு வருட ஆரம்பத்திலிருந்து  இருந்து (01 ஏப்ரல் ) வருட கடைசி வரை (31st மார்ச் )   ரொக்கமாக கட்டிய தொகை ரூபாய் 10 லட்சத்துக்கு மேலே இருந்தால் அந்த தகவல் வங்கில் இருந்து மேல்படி AIR RETURN முலம் வருமானவரி இலாகாவுக்கு போகும். அதைவைத்து வருமான வரி இலக்கா உங்களை இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள். இந்த பணம் வரி கட்டிய பணமாக இருந்தால் தப்பலாம். இல்லை என்றால் அதற்கு வரி, மற்றும் அபராதம் விதிக்க படும்.

2. CRDIT CARD வைத்து கொண்டு சிலர் இஷ்டத்துக்கு செலவு செய்வார்கள். இவ்வாறு செலவு செய்யும் தொகை ரூபாய் 2 லட்சத்து மிக இருந்தால் அந்த தகவல் வருமான வரி இலாகாவுக்கு போகும். இவ்வாறு செலவு செய்த தொகைக்கு சரியான வரி கட்டின வருமானம் இருந்தால் தப்பலாம். இல்லை எனில் மாட்டினார்கள்.

3.இதே மாதிரி ஒரு வருடத்தில் கம்பனியின் ஷேர் களில் நேரடியாக ஒரு லட்சத்துக்கு மேல கொள் முதல் செய்து இருந்தால் தகவல் வருமான வரி இலாகாவுக்கு போகும். ஆனால் SECONDARY மார்க்கெட்டில் கொள் முதல் செய்பவர் களுக்கு இது பொருந்தாது.

4.இதே மாதிரி MF ( MUTUAL FUND)இல் முதலீடு ரூபாய் இரண்டு லட்சம் மேல் ஒரு வருடத்தில் செய்து இருந்தால் scrutiny வரும்.

5.அதே மாதிரி யாராவது ரூபாய் முப்பது லட்சத்துக்கு  ( guidleline valueபடி ) மேல் அசையா சொத்து வாங்கி இருந்தாலோ அல்லது விற்பனை செய்து இருந்தாலோ அந்த விபரம் Registrarஇன் AIR முலம் வருமான வரி இலாகாவிற்கு போய் scrutiny வரும். இந்த விபரம் தெரியாமல் பலர் பத்திரம் எழுதுபவர் பேச்சை கேட்டு கொண்டு , பத்திரத்தில் தொகையை குறைத்து போட்டுகொண்டு பிறகு ஸ்டாம்ப் டுட்டி மட்டும் தனியாக கட்டி விடுவார்கள். ஆனால் உண்மையான விபரம் guideline படி கம்ப்யூட்டர் முலமாக வருமான வரி இலாகாவுக்கு தெரிந்து விடும்.

 ஆகவே நான் வேண்டி கேட்டுகொள்வது எல்லாம் எல்லோரும் கண்டிப்பாக guideline valueக்கு தான் கிரயம் செய்ய வேண்டும். அந்த தொகைதான் கண்டிப்பாக பத்திரத்தில் கிரயம் கொடுத்த தொகையாக எழுதி இருக்க வேண்டும். எல்லோரும் எந்த விதமான சொத்துக்கள் வாங்கும்போதும் விற்கும் போதும் கண்டிப்பாக பத்திர நகலை அவரவர் பட்டைய கணக்கர் (chartered accountant) வசம் கண்பித்து விட்டு அவரின் அறிவுரை பெற்று செய்ய வேண்டும்.

 இடம் வாங்கி கொடுக்கும் புரோக்கர் அல்லது பத்திரம் எழுதுபவர் சொல்லுவதை கேட்டு கொண்டு  guidelineக்கு குறைவாக பத்திரத்தில் எழுதி பிறகு ஸ்டாம்ப் டுட்டி கட்டினால் கஷ்டப்பட வேண்டி வரும்.

இது மட்டும் அல்லாமல் வேறு பல வழிகளில் வருமான வரி இலாகாவுக்கு தகவல்கள் வருகின்றன. பலவேறு பெட்டிசன்கள் மூலம் நிறைய தகவல்கள் கிடைகின்றன. இந்த இலாகாவில் CIB ( COLLECTION OF INFORMATION BRANCH) என்று பிரிவு உள்ளது. இந்த பிரிவு பல இடங்களில் இருந்து தகவல்கள் பெற்று அதை வருமானவரி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கிறது. புதிய விலை அதிகமான கார் வாங்கினால், மருத்துவ கல்லூரிக்கு பெரிய அளவுக்கு பணம் கட்டினால் , மிக அதிகமாக செலவு செய்து வெளிநாடு டூர் சென்று வந்தால் தகவல் நமது வருமான அதிகாரிக்கு கொடுப்பது இந்த பிரிவுதான்.


இதுவரை நான் எழுதி இருப்பது வருமான வரி இலக்கா எப்படி scrutinyக்கு
கேஸ்களை தேர்த்து எடுக்கிறது என்பதை பற்றி மட்டும் தான்.

இனி வரும் பதிவுகளில் scrutinyஇல் கணக்கு எப்படி பார்க்க படுகிறது என்பதை பற்றி விபரமாகாக  பல பதிவுகளில் பார்க்கலாம்.

இன்னொரு விஷயம் . நான் தமிழனாக பிறந்தாலும் வருமான வரி சம்பந்தமான சில technical termsக்கு சரியான தமிழாக்கம் தெரியாத காரணத்தாலும் நமது வாசகர்கள் சுலபமாக புரிந்து கொள்ளவேண்டும் என்ற தாக்கத்தாலும் , சில ஆங்கில வார்த்தைகள உபயோக படுத்தி இருப்பேன். மன்னிக்கவும்.








No comments:

Post a Comment