Sunday, August 4, 2013

இந்த வருடத்தின் வருமான வரி RETURN FILE செய்வதில் உள்ள பிரச்சினைகள்

இந்த வருடம் வருமான வரி RETURN செய்வதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்து உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம்.

இந்த வருடத்தில் இருந்து ரூபாய் ஐந்து லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஆன்லைனில் தான் வருமான வரி RETURN FILE செய்ய வேண்டும் என நமது நிதி அமைச்சர் சென்ற பட்ஜெட் உரையில் சொல்லி இருந்தார்.

இது மட்டும் அல்லாமல் நமது வருமான வரி துறை சென்ற வருடத்தில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள் வருமான வரி நமுனா பதிவு செய்வதில் விலக்கு கொடுத்து இருந்தது . அந்த விலக்கை இந்த வருடம் வாபஸ் பெற்று கொண்டது. ஏன் இந்த விலக்கு வாபஸ் பெற வேண்டும் என்பதிற்கு காரணம் இது வரை மத்திய  அரசு தெரிவிக்கவில்லை.

இதன் விளைவாக எராளமான பேர் வருமான வரி நமனா ஜூலை மாத கடைசி தேதிக்குள்  பதிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அவ்வளவு பெரும் ஒரே சமயத்தில் வருமான வரி பதிவு செய்யும் WEBSITE க்கு சென்றதால், அந்த WEBSITE கடந்த பத்து நாட்களாக கிடைப்பது இல்லை.

ஒரு வருமான வரி  return பதிவு செய்ய ஒருவர் குறைத்த பட்சம் ஐந்து தடவை அவது அந்த வெப்சைட் க்கு செல்ல வேண்டும்.

முதலில் அவரது PAN நம்பர் வருமான வரி வெப்சைட் இல் பதிவு செய்ய வேண்டும்.

பிறகு அவரது TDS விபரத்தை பதிவு இறக்கி சரி பார்க்க வேண்டும்.
அதன் பிறகு அவரது வருமான வரி நமுனாவை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வளவும் செய்ய வேண்டும் என்றால் இந்த வருமான வரி இலாகாவின் வெப்சைட் சுலபமாக கிடைத்தால் மட்டுமே முடியும்.

ஆனால் கடந்த பத்து நாட்களாக வருமான வரி e FILING WEBSITE கிடைப்பதே இல்லை. காரணம்  என்ன?

தேவைக்கு ஏற்ப அந்த வெப்சைட் அதன் server   அதிக படுத்தபட வில்லை. அந்த வெப்சைட் இன் capaciy (Bandwith )  இல்லாததால் பல பேர் வருமான வரி returns  பதிவு செய்ய முடிய வில்லை.

என்னுடைய chartered accountant  நண்பர்கள் பலர் என்னிடம் தினசரி போன் செய்து அவர்களுடைய computax அல்லது winman  software இல் தவறா அல்லது bsnl அல்லது airtel இல் பிரச்சனையா என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

நான் அவர்களிடம் பிரச்சினை e filing website இல்தான் என்று விளக்கி சொன்னேன். நான் கடந்த சில நாட்கள தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து returns பதிவு செய்வதை ,சொல்லி அவர்களையும் அவ்வாறே செய்ய சொன்னேன்.

இவ்வளவு பேர் ஒரே சமயத்தில் நமனா பதிவு செய்ய காரணம் என்ன?

1. வருமான வரி return  FORMAT மற்றும் அதற்கான கம்ப்யூட்டர் SCHEMA  ஆகியவற்றை வருமான வரி துறை மிக தாமதமாக வெளிட்டது.

2. tds return பதிவு செய்து பிறகுதான் வருமான வரி return  பதிவு செய்ய முடியும்.

இப்போது வருமான வரி இலாகா வருமான வரி return  பதிவு செய்வதற்கு ஆகஸ்டு  ஐந்து தேதி  கடைசி நாளாக தெரிவித்து உள்ளது.

ஆனால் இன்னும் E  FILING வெப் சைட் சரி ஆக  வில்லை. ஆகவே  இந்த கடைசி நாளை  இந்த மாத  கடைசி  வரை அதிகம் செய்ய வேண்டும்.

இனிமேல் இந்த மாதிரியா பிரச்சனைகள் வராமல் இருக்க வருமான வரி துறை கிழ்க்கண்டவற்றை செய்ய வேண்டும்.

1. e filing வெப்சைட் இன் band width அதிக படுத்த வேண்டும். அதன் server  capacity யை அதிகம் செய்ய வேண்டும்.
2. வருட ஆரம்பித்திலேய அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று  வருமான வரி return  போர்மட் மற்றும் schema வெளியிட வேண்டும்.